Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்த ஆட்சியில் மகளிருக்கு நிறைய திட்டங்கள் செய்துள்ளோம்- அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகின்ற 19ம் தேதி திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மகளிர் அணி தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம் இன்று தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் கே என் நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், கோவி செழியன் , மெய்யநாதன் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் பங்கேற்பு. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு வருகின்ற 19ஆம் தேதி செங்கிப்பட்டியில் மாலை 3 மணிக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மாநாடு நடத்துவதற்கு 100 ஏக்கர் வாகனம் நிறுத்துவதற்கு 100 ஏக்கர் என 200 ஏக்கரில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநாட்டில் தமிழக முதல்வர் துணை முதல்வர் கனிமொழி கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் 12,500 பூத்துக்கு பத்து பேர் என 1.25 லட்சம் பேர் சீருடை உடன் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் வரும் நேரத்தில் மகளிர் திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறைய செய்துள்ளோம் மகளிர் கான ஆட்சியாக இது உள்ளது இதனை சொல்லி ஓட்டு கேட்கவும். இது கட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு பெரிதும் பெரிய உதவும். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து கேட்டதற்கு அது தேவையில்லை என தெரிவித்தார்.

error: Content is protected !!