Skip to content
Home » ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன். 72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது தாயாரை ஜல்பாய்குரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கடந்த புதன்கிழமை கொண்டு போய்ச் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த நாளே உயிரிழந்தார். அங்கிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தாயாரின் உடலை எடுத்துச்செல்வதற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.3 ஆயிரம் கேட்டிருக்கிறார்கள். பாவம், அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. உடனே அவர் தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் வைத்து சுமந்து கொண்டு சொந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அதன் இன்னொரு பகுதியை வயதான அவரது தந்தை சுமந்தவாறு பின்தொடர்ந்தார். இந்த காட்சி நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது. அத்துடன், சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்று இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி செய்துதந்து ராம்பிரசாத் தெவன் தாயார் உடலை வீடு கொண்டு போய்ச் சேர்த்துள்ளது. இதுபற்றி ராம் பிரசாத் தெவன் கூறியதாவது:- எங்கள் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.900 கொடுத்தோம். ஆனால் அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.3 ஆயிரம் கேட்டனர். எங்களால் அவ்வளவு பணம்கொடுக்க வசதி இல்லை. எனவே அம்மாவின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி என் தோளில் வைத்து சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என் வயதான அப்பா எனக்கு உதவினார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!