Skip to content
Home » ரஜினி தான் சூப்பர் ஸ்டார்….. லியோ பட விழாவில் விஜய் பேச்சு

ரஜினி தான் சூப்பர் ஸ்டார்….. லியோ பட விழாவில் விஜய் பேச்சு

  • by Senthil

நடிகர் விஜய் நடித்த  லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.  இந்த விழாவில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார்  பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.  வாரிசு பட  இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் பேசும்போது,  விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றார்.  இதற்கு அடுத்ததாக  ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி இதற்கு மறைமுகமாக பதில் அளித்தார். படத்தயாரிப்பாளர் கலாநிதி மாறன், யார் சூப்பர் ஸ்டார் என்பதற்கு கடுமையான விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று  நடந்த லியோ பட விழாவில் பேசிய  நடிகர் விஜய், ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என கூறி , பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  விழாவில் விஜய் பேசியதாவது:

” புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான், நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான், புரட்சி கலைஞர்-னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலகநாயகன்-னா ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார்-னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான்,” என்று தெரிவித்தார். மேலும் தளபதி குறித்து பேசிய விஜய், “என்னை பொருத்தவரை தளபதி என்பவர், மன்னர்கள் சொல்வதை செய்து முடிப்பவர். எனக்கு மன்னர்கள் மக்களாகிய நீங்கள் தான். நீங்கள் சொல்லுங்கள், நான் செய்து முடிக்கிறேன்,” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!