Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி-குழந்தை கொலை…. கணவருக்கு இரட்டை ஆயுள்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த தளவாய்புரம் இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இசக்கியம்மாள்(28). இத்தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் தேதி வெங்கடேசன், தூங்கிக்கொண்டிருந்த தனது 6 மாத குழந்தையை  தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்றார். அத்துடன், மனைவி இசக்கியம்மாளை அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு, தப்பிச்சென்றார்.

இது குறித்து சின்ன கோவிலங்குளம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி விஜயகுமார் கொலையாளி வெங்கடேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!