கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேரு காலனி சேர்ந்த கௌரிக்கு கிருஷ்ணமூர்த்தி இரண்டாவது கணவர் ஆவார்,இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர், இருவருக்கும் ஆறுமுகம் (எ) சக்கரத்தாழ்வார்(1) என்ற மகன் இருப்பதாகவும், முதல்,இரண்டாவது மனைவியுடன் விவாகரத்து பெற்று கிருஷ்ணமூர்த்தி மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து வந்ததாகவும், கிருஷ்ணமூர்த்தி கௌரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். நேற்று நடுரவில் தூங்கிக் கொண்டிருந்த கௌரியின் மீது டர் பெண்டைன் எண்ணெயை மேலே ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். கௌரியின் அலறல் சத்தம் கேட்டுஅப்பொழுது பொதுமக்கள் கெளரியை மீட்டு ப பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் கிருஷ்ணமூர்த்தி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மனைவியை எரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.