Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு புகுந்து பெண் கொடூரமாக வெட்டிக்கொலை.. பயங்கரம்

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

தருமபுரி மாவட்டம் காரன்கொட்டாய் பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அருகில் உள்ள விவசாய நிலத்தில் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக தருமபுரி காவல்துறையினர் ஒருவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கம்போல் லட்சுமி தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அவர் என்றும் பாராமல் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பின், குற்றத்தை மறைக்கும் நோக்கில் லட்சுமியின் உடலை அவரது வீட்டிலிருந்து தூக்கிச் சென்று அருகில் இருந்த ஒரு விவசாய நிலத்தில் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். காலையில் உடலைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!