கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணை, திருமணம் செய்வதாக ஏமாற்றிய அந்தோணி மரிய ராபின் மற்றும் அவரது நண்பர் கிரிஷ் சாமுவேல் குமார் ஆகியோர் மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். பெண்ணின் புகாரைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரிஷ் சாமுவேல் குமாரைக் கைது செய்தனர். தலைமறைவான அந்தோணி மரிய ராபினைத் தேடி வருகின்றனர்.
கோவை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்
