மகாராஷ்டிராவின் பாண்டு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர், கீழே இருந்த மரத்தின் கிளைகளில் சிக்கி உயிர் தப்பினார். மரக்கிளையில் தொங்கியபடி பயத்தில் சத்தம் போட்ட அப்பெண்ணை தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சியில் குதித்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
