Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக தண்ணீர் தினம்…. சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக்கூட்டம்….

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பூமா தலைமை வகித்தார். கூட்டத்தில் தண்ணீர் சிக்கனம் குறித்து வலியுறுத்தப் பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். இதேப் போன்று ரெகுநாதபுரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இதில் கிராம மக்கள் பங்கேற்றனர். இதேப் போன்று ராஜகிரியில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சித்

தலைவர் சமீமா பர்வீன் தலைமை வகித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் உட்பட பங்கேற்றனர். இதில் கிராம வளர்ச்சி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்டத் தலைப்புகளில் விவாதம் நடந்தது. இதேப் போன்று உள்ளிக் கடையில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!