Skip to content
Home » X-ல் மாயமாகும் போட்டோக்கள்….எலான் மஸ்க் -ன் அடுத்த பயங்கரம்…

X-ல் மாயமாகும் போட்டோக்கள்….எலான் மஸ்க் -ன் அடுத்த பயங்கரம்…

எக்ஸ் (முன்பு டுவிட்டர்) மிகப்பெரிய ரிபரிாண்டிங்கை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பல மாதங்களில் எக்ஸ் தளத்தில் பெயர் மற்றும் லோகோ உள்பட ஏராளமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய மாற்றத்தின் படி எக்ஸ் பயனர்களுக்கு உலகளவில் வருவாய் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கணிசமான தொகை வழங்கப்பட்டு வருகிறது. பலர் எக்ஸ் தளத்தில் இருந்து வருவாய் கிடைப்பதை ஒட்டி மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில், மேலும் பலர் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் 2014 மற்றும் அதற்கும் முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இணைய முகவரிகள் மாயமாகி வருவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, டிவிட்டர் தளத்தில் இருந்து வரும் பில்ட்-இன் யு.ஆர்.எல். ஷார்ட்னர் கொண்டு பகிரப்பட்ட இணைய முகவரிகள் மற்றும் புகைப்படங்கள் தளத்தில் இருந்து மாயமாகி இருக்கிறது. புகைப்படம் மற்றும் இணைய முகவரிக்கு மாற்றாக புகைப்படம் இல்லாமலும், ஹைப்பர்லின்க் நீக்கப்பட்டோ அல்லது இயக்க முடியாத வகையிலோ உள்ளது என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது. மேலும் எலென் டிஜெனரெஸ் டுவிட்டரில் பதிவேற்றம் செய்த உலக புகழ்பெற்ற ஆஸ்கர் செல்ஃபி தற்போது காணப்படவில்லை. இந்த செல்ஃபியில் பிரபல நடிகர்களான பிராட்லி கூப்பர், ஜெனிஃபர் லாரன்ஸ் மற்றும் மெரில் ஸ்டிரீப் உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர். இந்த டுவீட் மட்டும் 2.8 மில்லியன் முறை ரி-போஸ்ட் செய்யப்பட்டு, சுமார் 2 மில்லியன் லைக்குகளை வாரிக் குவித்தது. இந்த டுவீட்-ஐ பார்க்கும் போது, அத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படம் இல்லாததை கண்டுபிடிக்க முடியும். இதே போன்று 2012-ம் ஆண்டு பராக் ஒபாமா பதிவிட்ட டுவிட்டர் பதிவில் புகைப்படம் காணப்படுகிறது. அந்த வகையில், இந்த புகைப்படம் நீக்கப்பட்டதா அல்லது மீண்டும் ரிஸ்டோர் செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாற்றம் குறித்து எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!