திருச்சி சோமரசம்பேட்டை அருகே சோகம் ;
ஆணாக மாற விரும்பிய பட்டதாரி இளம் பெண் தற்கொலை
பெற்றோர் கண்டித்ததால் சோகம்
திருச்சி ஜூன் 22 –
திருச்சி சோமரசம்பேட்டை வாசன் வேலி 11 -வது குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்
முருகானந்தம் வயது 52. கல்லூரி பேராசிரியர். இவரது மகள் தரங்கனி வயது 23.
பி டெக் பட்டம் பெற்றுள்ள இவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார்.
இவருடைய நடவடிக்கையில் சமீப காலமாக மாற்றங்கள் தென்பட்டதாக தெரிகிறது. பெரும்பாலான நேரங்களில் ஆண் தோற்றத்தை விரும்பியுள்ளார் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர்
வீட்டிலிருந்து பணியாற்றி வந்தார்
அப்போது சிறுவர்களைப் போல முடியை வெட்டிக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் எதிர்காலம் பாதிக்கக்கூடும் என்று கவலை தெரிவித்தனர்.மேலும அண்மையில் அவரை அவ்வாறு செய்ய வேண்டாம்
கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான தரங்கனி
யாரும் எதிர்பாராத வகையில் தூக்கு போட்டு தொங்கினார்.
பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் பின்னர் இது குறித்து முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே புலிவலத்தில்
இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் விபரீதம்
திருச்சி ஜூன் 22 –
திருச்சி மாவட்டம் முசிறி டி. மேட்டூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் இவரது மனைவி பத்மா வயது 38 இந்த தம்பதியருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே திடீர் தகராறு ஏற்பட்டது.
இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பத்மா யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு வீட்டின் விட்டத்தில் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது குறித்து அவரது சகோதரர் சிவக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி நவல்பட்டு அருகே
மதுவுக்கு அடிமையான தொழிலாளி தற்கொலை
திருச்சி ஜூன் 22 –
திருச்சி குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் வயது 42. மதுவுக்கு அடிமையான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் அவரது தாயார் வள்ளி வெளியே புறப்பட்டு சென்ற நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் யாரும் எதிர்பாராத வகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது பற்றி வள்ளி கொடுத்த புகாரின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
