திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்பழனிவேல் தலை மேலான போலீசார் திருவரங்கம் கோவில் வடக்கு வாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவானைக்காவல் திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்த டேவிட் ஹரி கிருஷ்ணன் (வயது 38)என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்அனுமதி இன்றி ஐந்து சாக்கு முட்டையில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டேவிட் ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 சாக்கு மூட்டை மணல் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
