Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சியில்

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருச்சி ஜூலை 24

திருச்சி பருப்பு கார தெரு ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்
ராஜ பிரபாகரன். இவரது மகன் அந்தோணி (22). இவர் வீட்டில் இருந்து வேலை தேடுவதற்காக ஒரு ஆன்லைன் வேலை வாய்ப்பு தளத்தில் பதிவு செய்தார் அதை தொடர்ந்து அந்த நிறுவனம் அவரை இ மெயிலில் தொடர்பு கொண்டு அவரது புகைப்படம் ஆதார் அட்டை மற்றும்
கையெழுத்தை கேட்டது பின்னர் வேலை தயாராகி விட்டதாக கூறி அவர் அளித்த ஆவணங்களை பயன்படுத்தி ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர் பின்னர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பணம் கேட்டனர் அவர்களின் வார்த்தையை நம்பி அந்தோணி ரூபாய் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 980 பணத்தை வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார் அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் இது பற்றி ஆன்லைன் மூலம் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!