Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி..

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி

திருச்சி லால்குடி அன்பில் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 34).
இவர் மண்ணச்சநல்லூர் நொச்சியம் பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் செந்துரியா (27) என்பவரை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து நம்பர் ஒன் டோல்கேட் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
செந்துரியாவை வேலைக்கு செல்லும் வழியில் அவரது வீட்டில் இறக்கி விட்டு வட்டு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இவர்கள் செம்பழனி பகுதியில் வந்த போது எதிரே வந்த காருடன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அஜித் மற்றும் செந்துரியா ஆகிய இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு செல்லும் வழியிலேயே இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னாள் சென்ற வாகனத்தை அஜித்குமார் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இது பற்றி சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கார் மோதி இளம் பெண் மற்றும் வாலிபர் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!