Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணமான 4ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை-சோகம்

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிராஜ். இவரது மனைவி விவேதா (27). இந்த தம்பதியருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனவேதனையில் இருந்த விவேதா, நேற்று தனது வீட்டில் உள்ள படுக்கையறையின் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவலறிந்து வந்த சாயர்புரம் போலீசார், விவேதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் ஆத்தாமல்லி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!