Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் சென் போன் கடை அருகே வாலிபர் சாவு

திருச்சி கீழ சிந்தாமணி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் ( 46). இவர் தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனலட்சுமி இறந்துவிட்டார். இதனையடுத்து அவர் புவனேஸ்வரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதையடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக புவனேஸ்வரி தனியாக வசித்து வந்தார். இதனால் மனமுடைந்த மகேந்திரன் சம்பவத்தன்று திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!