ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு
திருச்சி ஜூலை 15- கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜகோபால் (60). இவர் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு–
திருச்சி ஜூலை 15 – திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகை கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார்
வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மின்சாரம் தாக்கி இருந்த வாலிபர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
