Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்லாவரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை – 2 பேர் கைது!

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

பல்லாவரம் ஏரிக்கரை தெருவில் நேற்று நடந்து சென்ற வாலிபரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அஸ்தினாபுரம், அண்ணா நகர், திருக்குறள் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (25). அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்றிரவு பல்லாவரம், மலங்காநந்தபுரம் ஏரிக்கரை தெருவில் ஆகாஷ் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து 3 பேர் கும்பல் வந்தது. அப்போது, திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் ஆகாஷை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பல்லாவரம் பஸ் நிலையம் அருகே ரத்தக்கறை படிந்த ஆடையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது, பல்லாவரம், மலங்காநந்தபுரம், ஏரிக்கரை தெருவை சேர்ந்த குரு (எ) புருஷோத்தமன் (23), விமல்ராஜ் (22) என்பதும் ஆகாஷை கொலை செய்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, பல்லாவரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தப்பி சென்ற ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link