Skip to content
Home » வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

  • by Senthil

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31ம் தேதி மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது. மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!