ஆன்லைன் ரம்மியால் கடன்.. புதுச்சேரி வாலிபர் தற்கொலை…

73
Spread the love

புதுச்சேரி அருகேயுள்ள கோர்க்காடு ஏரிக்கரையோரம் பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (34)என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் சிம் கார்ட் மற்றும் ரீ சார்ஜ் கடை நடத்தி வருபவர் என்றும் இவர் சில மாதங்களாக தன் செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி எனப்படும் சீட்டு கட்டு விளையாட்டை விளையாடி அதற்காக அதிக அளவில் கடன் வாங்கி பந்தயம் வைத்து விளையாடியதில் பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கும் போது அதனை திருப்பி தர முடியததால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான விஜயக்குமார் நேற்று இரவு கோர்க்காடு நத்தமேடு ஏரிக்கரை பகுதியில் தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலிசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்

 

LEAVE A REPLY