Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மளிகை கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை …

கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு மளிகை கடைக்கு சென்று உள்ளார். உணவு அருந்துவதற்காக சக்திவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் வைத்திருந்த செயின் ,மோதிரம், தோடு, உள்ளிட்ட 13 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 13 பவுன் தங்க நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 65 ஆயிரம் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு மட்டுமே செய்து வருகின்றனர் உரிய நடவடிக்கை எடுத்து கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!