Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய்யுடன் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் 107 இடங்களைக் கொண்டிருந்தது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் நீடித்த இழுபறி, காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முடிவுக்கு வந்தது.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பலம் 120 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, கவர்னர் அர்லேகரைச் சந்தித்து விஜய் உரிமை கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட கவர்னர் அழைப்பின் பேரில், இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் “ஜோசப் விஜய் எனும் நான்” என உறுதிமொழி கூறி தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன்  என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இவ்விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!