Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு கட்டாயம்….. அமைச்சர் மகேஷ்…

கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12ம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் +2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 14-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மாலை 5 வரையோ, அல்லது மாலை 5.30 மணி வரையோ நடைபெற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!