திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன் செயினை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே கே நகர் அய்யப்பன் நகர், யாசர் தெரு இலுப்பூர் சாலையை சேர்ந்தவர் மலர்க்கொடி (53) இவர் அதே பகுதியில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் கடையில் பொருட்கள் விலை குறித்து விசாரிப்பது போல் விசாரித்துவிட்டு அங்கிருந்த முட்டையை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அவர் அணிந்து இருந்த சுமார் 13 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பி சென்றனர் இதுகுறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் திருச்சி மாநகர மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கா நகரை சேர்ந்தவர் மகேந்திர குமார் (49) இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு மகேந்திர குமார் திடீரென மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு மருத்துவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர் இந்த நிலையில் மகேந்திரகுமார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சமையல் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
திருச்சி பாலக்கரை கண்மியான் மேட்டு தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் டியோ (43), சமையல் வேலை செய்து வருகிறார் மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் கிறிஸ்டோபர் டியோ பால் பண்ணை சாலையில் உள்ள டாஸ்மாக் இருக்கு மது குடிக்க சென்றார் அங்கு அவர் திடீரென மயங்கினார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில் இறந்து கிடந்த சரித்திர பதிவேடு ரவுடி
திருச்சி கீழ சிந்தாமணி சங்கரன்பிள்ளை சாலையை சேர்ந்தவர் பிராங்க்ளின் நிக்சன் ராஜ்( 26 ) சரித்திர பதிவேடு ரவுடியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இந்த நிலையில் நேற்று இவர் தன் வீட்டின் அருகே மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து
கோட்டை போலீசார்வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
