பெங்களூருவில் இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் சாட்டிங் செய்ததாகக் கூறி, 9-ஆம் வகுப்பு சிறுமியை அவரது 16 வயது காதலன் நாட்டுத் துப்பாக்கியால் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளான். கொலையை மறைக்கச் சிறுவன் தனது அண்ணன் மற்றும் மாமாவுடன் சேர்ந்து சிறுமியின் உடலை விவசாய நிலத்தில் புதைத்துள்ளான். சிறுமி மாயமான புகாரில், ஒரு வாரம் கழித்து இக்கொடூர சம்பவம் அம்பலமாகி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
