கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (41). இவரது மனைவி ராஜேஸ்வரி (38 ). இந்த தம்பதிக்கு விஷ்வா (17 ) என்ற மகன் இருந்தார். இவர் பிளஸ்-2 படித்துவிட்டு தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷ்வா தனது தந்தை ஆனந்தனின் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது அந்த புத்தகத்தை அவர் தொலைத்து விட்டார். இதுபற்றி விஷ்வா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் ராஜேஸ்வரி விஷ்வாவை கண்டித்துள்ளார்.இதனால் மனமுடைந்த விஷ்வா, நேற்று முன்தினம் இரவு மாடாம்பூண்டி சித்தேரி ஏரிக்கரையில் இருந்த புளியமரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த திருப்பாலப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
