Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்டிலில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி-திருச்சியில் பரிதாபம்

திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா ( 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார். தரம்சிங் மீனாவின் சகோதரர் ராஜேஷ் குமார் மீனா. அவரது குழந்தை பாரி மீனா (2).
இக்குழந்தை கடந்த ஒரு மாதமாக தரம்சிங் மீனாவின் வீட்டில் இருந்தது.
அங்கே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பாரி மீனா உருண்டு படுத்தபோது தவறி கீழே விழுந்தார் . இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடியது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!