வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று (ஆக.14) 505 பேருந்துகளும், நாளை 570 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் கோயம்பேடு மற்றும் மாதவரத்திலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களுக்கு 380 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற நகரங்களிலிருந்து 200 பேருந்துகளும், ஞாயிறன்று பயணிகள் ஊர் திரும்ப வசதியாக 465 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
