Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்- பரபரப்பு

கோவை அன்னூர் அருகே காக்கா பாளையம் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பில் முகாமிட்டுள்ள மூன்று காட்டு யாணைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று காட்டு யானைகள் திடீரென சாலையை கடந்து அங்குள்ள டாஸ்மாக் ஒன்றின் எதிர்ப்புறம் உள்ள தைல மரத்தோப்பிற்குள் நுழைந்தது.

நேற்றைய தினம் கீரனத்தம் பகுதியில் உலாவிய இ

ந்த மூன்று யானைகள் இன்று அதிகாலை அங்கிருந்து நகர்ந்து காக்கா பாளையம் பகுதிக்கு வந்துள்ளது.

வனப்பகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பகுதிகளில் திடீரென காட்டு யானையை பார்த்தவுடன் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து யானை நடமாட்டம் குறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் யானையை பின்தொடர்ந்து சென்று 5 குழுக்களாக பிரிந்து யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழையாத வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

20 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள சிறுமுகை வனப்பகுதிக்குள் யானையை கொண்டு செல்ல வேண்டும் என்பதால் அதற்கான வியூகங்கள் குறித்து வனத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!