Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியாவுக்கு எதிராக 3வது ஒன்டே… ஆஸி. 352 ரன்கள் குவிப்பு…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்த வருகிறது. ஏற்கவே 2 போட்டிகளில் இந்தியா வென்றுள்ள நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 352 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்கள், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்கள், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்கள், அலெக்ஸ் காரே 11 ரன்கள் எடுத்தனர். பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!