Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் அசத்தலான வெற்றியை பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ்,” கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் 7வது சுற்றில் தோல்வியடைந்தது மிகுந்த மன வேதனையை அளித்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியை அளித்துள்ளது. என்னை இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! | nakkheeran

பார்ப்பதற்காக இத்தனை பேர் வருகை தந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி நேரத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியம் தான். ஆனால் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். தற்போது மீண்டும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லிங் டிரெனை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன். அனைவரின் ஒத்துழைப்போடும், திறமையாக விளையாடி போட்டியை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!