Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் பளுதூக்கும் போட்டி….. 82வயது மூதாட்டி அசத்தல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள முத்து கவுண்டனூர் பகுதியை  சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி கிட்டம்மாள் (82)  விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு  ஒரு மகன், இரு மகள்கள்  உள்ளனர். இவரது 3வது மகள்  வீடு பல்லடத்தில் உள்ளது,பேரக்குழந்தைகள் பளு தூக்கி பயிற்சி செய்வதை பார்த்து கிட்டம்மாள்  தானும் இம்மாதிரியான பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்று  பேரக்குழந்தைகளிடம் கூறினார்.

இதை அடுத்து  கிட்டம்மாள் பல்லடத்தில்  உள்ள  சதீஷ் என்பவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி பெற்றார். ,பயிற்சி கூடத்தில் பளு துக்கும் போட்டி நடைபெற்றது இதில் கலந்து கொண்ட கிட்டம்மாள் பளு தூக்கி அசத்தினார். இதைக் கண்ட பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி கிட்டம்மாவை உற்சாகப்படுத்தினர் வயது ஒரு தடை இல்லை, பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன்.  தனது  ஆசை நிறைவேறியதாக த கிட்டம்மாள் தெரிவித்தார்,தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!