வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 2027 ஜன. 1 முதல் வாக்காளர் பட்டியல் SSR பணி தொடங்கியது. மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 13 ஆக இருக்கும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காததால் 12 கட்சிகள் கலந்துகொண்டன. இதில் 9 கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் கட்சி (NPP) ஆகிய மூன்று கட்சிகள் பங்கேற்றன.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி கூட்டத்தில் இருந்து திமுக, தவெக, காங்கிரஸ், தேமுதிக, நாதக, விசிக சிபிஐ, சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதிமுக, பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி பிரதிநிதிகள் மட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றன. வெளிநடப்பு செய்த தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது; இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை, தலைமைப் பொறுப்பில் வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் மேற்கொள்கிற எந்த நடவடிக்கையும் நம்பகத்தன்மையற்றதுதான். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
