மதுரை: ரூ. 5 கோடி லஞ்ச வழக்கில் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுகுமாறன் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, காவல் ஆய்வாளர் சுகுமாறனைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட ஆய்வாளர் சுகுமாறனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்ஸ்பெக்டர் சுகுமாறனை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு!
