Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விருத்தாசலம் அருகே கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.

அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாகத் தூர்வாரப்படாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. விவசாய விளைநிலங்களில் இருந்து வெளியேறிய நீரும், நேற்று பெய்த மழைநீரும் வடிகால் வாய்க்கால் வழியாக முறையாக வெளியேற முடியாமல் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தன.

இதனால் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க வடிகால் வாய்க்கால்களை முறையாகத் தூர்வாரி, மழைநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கார்கூடல் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலைச் சீரமைத்து, குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!