Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“எங்கிருந்தும் எந்நேரத்திலும்” பட்டா மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, https://tamilnilam.tn.govin/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம்.

உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

பட்டா மாறுதலின் ஒவ்வொரு நிலையும் மனுதாரருக்கு ‘குறுஞ்செய்தி் வாயிலாக தெரிவிக்கப்படும். பட்டாமாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், பொதுமக்கள் (1) பட்டா மாறுதல் உத்தரவு நகல் (2) பட்டா / சிட்டா. (3)புலப்படம், (4)அ-பதிவேடு ஆகியவற்றை ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்” https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!