Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐதராபாத் விமான நிலையத்தில் வரிசையில் நின்ற நடிகர் விஜய்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ‘வாரிசு’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். இதில் விஜய்யுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  இந்த நிலையில் வாரிசு பட வெற்றி கொண்டாட்டம் முடிந்து ஐதராபாத் விமான நிலையம் திரும்பபினார் விஜய்.  ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர் இல்லாமல் நடந்து சென்றார். விஜய் மற்ற பயணிகளைப் போலவே பாதுகாப்பு சோதனை வரிசையில் நுழைந்தார், முககவசம் அணிந்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!