Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 திரும்ப பெற வேண்டும் , ஆன்லைன் அபராதத்தை கைவிட்டு , பெட்ரோல் ,டீசல் மற்றும் கேஸ் விலைகளை குறைத்திட வேண்டும் , ஓட்டுநர்களை குற்றவாளியாக்கும் BN – 106 திரும்ப பெற வேண்டும் , டோல்கேட் கட்டணங்களை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஓட்டுநர்கள் பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!