Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?…… நாம் தமிழர் கட்சி மறுப்பு

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார் என அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் பழ.நெடுமாறன் வெளியிட்டார். அதில் விரைவில் அவர் வெளியே வருவார். அவருடைய அனுமதியின் பேரில் இந்த தகவலை வெளியிடுவதாக கூறினார். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை  பிரபாகரன் விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்றும் கூறி இருந்தார்.

ஆனால் இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றிக்குமரன் மறுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் தமது ட்விட்டர் பக்கத்தில், தேசிய தலைவரைப் பற்றிய கருத்து… இந்திய உளவுத்துறையின் திட்டம், ஐயா நெடுமாறன் மற்றும் சமீபகாலமாக “இந்து தமிழ்தேசியமென” கூறிவரும் காசி ஆனந்தன் ஆகியோர்களால் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. தமிழினமே விழித்திரு என பதிவிட்டுள்ளார். இதேபோல நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்கும் பிரபாகரன் குறித்து குறிப்பிடாமல், போலியான நம்பிக்கைகளை விதைப்பது மக்களை மடைமாற்றம் செய்யவே அன்றி, வேறில்லை! என பூடகமாக மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!