Skip to content

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்தார் இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவு வந்ததால் கூட்ட நெரிசல் 100க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளனர். மயக்கம் அடைந்தவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதில் நேற்று வரை 40 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண் தீவிர சிகிச்சை பிரிவில் வென்குலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் அவர்களின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது . குறிப்பாக பெண்கள் 18 பேர்,ஆண்கள் 13, சிறுமிகள் 5, சிறுவர்கள் 5, என பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது..

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 34 நபர்களும் ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலா 2 நபர்களும் சேலத்தை சேர்ந்த 1 நபரும் என இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்…

error: Content is protected !!