Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா மற்றும் கிருஷ்ணவேணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்றனர் இந்த நிலையில் நேற்று ஆனைமலை மாசாணி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு ராஜா வந்திருப்பதாக சந்தான கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே ராஜாவை பார்த்த சந்தானகிருஷ்ணன் கத்திரிக்கோலுடன் சென்று அவரை ஐந்து இடங்களில் குத்தினார் படுகாயம் அடைந்த ராஜா நிலை தடுமாறி கீழே விழுந்தார் இவரை மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தானகிருஷ்ணனை ஆனைமலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ராஜாவை சந்தானகிருஷ்ணன் கத்தியால் குத்தி கீழே தள்ளியே வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது

error: Content is protected !!