Skip to content

2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 இடங்களில் ரூபாய்24.88 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் தார் சாலை மற்றும் தார் சாலை மேம்படுத்தும் பணி கணேசா நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி காமராஜ்புரம் கிழக்கு பகுதியில் தார் சாலை மேம்படுத்தும் பணி மேலும் பாரதி நகர் கோவை மெயின் ரோடு, அண்ணா நகர் ஆல் டைம் ரோடு, அங்காளம்மன் கோவில் ரோடு, பசுபதிலேயே அவுட் முதல் கிராஸ், பிரம்ம தீர்த்தம் ரோடு, மக்கள் பாதை, பண்டரிநாதன் கோவில் தெரு, பெரியார் நகர், ஜீவா நகர், காந்திநகர் உள்ளிட்ட

பல்வேறு பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இதேபோல் நேற்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 இடங்களில் இன்று பணி தொடக்க விழா நடைபெற்றது இதில் 13.63 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெற்றி விநாயகர் தெரு பகுதியில் 3 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணி கேவிபி காயத்ரி நகர் பகுதியில் 3 இடங்களில் பாடசாலை அமைக்கும் பணி மேலும் வேலுச்சாமிபுரம் எல் என் எஸ் கோவில் தெரு ,அரிக்காரம் பாளையம், பிள்ளையார் கோவில் தெரு ,பஜனை மண்டபம் தெரு

,தாமரை தெரு ,தில்லைநகர் ,விபிஜி நகர், ஜீவா நகர் ,அம்பேத்கார் நகர் ,எஸ்பி காலனி, ஜே ஜே சாலை, லட்சுமி நகர் ,எம் ஜி ஆர் நகர் ,காமாட்சி அம்மன் கோவில் தெரு, சிவானந்த தெரு, இந்திரா நகர், ரத்தினம் சாலை ,ஜவஹர் பஜார் ரோடு, காமராஜர் சிலை அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தார் சாலை அமைக்கும் பணியை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 87 இடங்களில் நேற்று இன்றும் பல்வேறு பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் செல்லும் இடத்தில் பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

error: Content is protected !!