Skip to content

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகர் தயாரிப்பில் வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பிரபு இணைந்து V.கேந்திரன் டைரக்ஷனில் இசையமைப்பாளர் இமான் இசையில் நடிகர் விமல் நடித்த வடம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னையில் ஜிவி பிரகாஷ் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதால் தயாரிப்பாளர்கள் வடம் திரைப்பட குடும்பத்தார் பொள்ளாச்சி அருகே . ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து 18 வகையான மூலிகை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர் இதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாண்டி முனி காளை மாட்டுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர் இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் வடம் திரைப்படம் பொள்ளாச்சி கோவை தென்காசி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அனைவருக்கும் தெரியும் மஞ்சுவிரட்டு (வடம்) பாரம்பரிய காளை மாடுகளை பாதுகாக்கும் விதமாக படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்

error: Content is protected !!