திமுக ரஜினிகாந்தை மிரட்டவில்லை தவறான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என ரஜினிகாந்தேஅறிக்கை விட்டுள்ளார்
இது போன்ற தவறான கருத்துக்கள் அவருடைய ரசிகர் மன்றம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும்
சென்னை விமான நிலையத்தில் லதா ரஜினிகாந்த் பேட்டி
சென்னையில் இருந்து விமான மூலம் துபாய் செல்வதற்காக ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார் அப்பொழுது செய்தியாளர்கள் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்
ரஜினிகாந்த் கமல் நடிக்கும் திரைப்படம் எப்பொழுது தொடங்குகிறது என்று தெரியவில்லை அது அனைவருக்கும் பெருமையாக இருக்கும் என நினைக்கின்றேன்
கடவுளுடைய கிருபையாலும் மக்களுடைய அன்பாலும் அவருடைய கடினமான உழைப்பு இதை நான் பெருமையாக நினைக்கின்றேன்
நடிகர் ரஜினிகாந்தை திமுக மிரட்டியது என ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து பதில் அளித்த அவர்
அது உண்மை இல்லை என்று அவரே கூறிவிட்டார் தவறான அவதூறு கருத்துக்களை பரப்ப கூடாது என கூறியிருக்கிறார் அல்லவா அவருடைய ஸ்டேட்மெண்ட்டை படித்தாலே தெரியும் கண்டிப்பாக தவறாக இருந்தால் அனைவரையும் இது பாதிக்கும் என கூறி விட்டுச் சென்றார்.
