பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். நேற்று திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் வழங்கினார். இந்நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், இரு மனுக்களிலும் வயதை வெவ்வேறாக குறிப்பிட்டிருப்பதால் குழப்பம் நிலவுகிறது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 52 என குறிப்பிட்டிருந்த விஜய், 3 நாட்களுக்குப் பின் திருச்சியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 51 என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு மனுவில் தன் மீது வழக்கு ஏதும் இல்லை எனவும், ஒரு மனுவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருந்தது பேசுபொருளானது.
இந்நிலையில் பெரம்பலூரில் திருச்சி கிழக்கு தொகுதியிலும், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முரணான தகவல்கள் இருந்தது சர்ச்சையான நிலையில், பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. விஜய் சார்பில் தவெக மாவட்ட செயலாளர் சிவா, புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

