Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணராயபுரம்: முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் பகுதிக்குட்பட்ட மேட்டாங்கினம், நத்தமேடு வனவாசி கடைவீதி சமத்துவபுரம் மாயனூர் கடைவீதி வெளியிட்ட 22 இடங்களில் மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரை பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மணவாசி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராஜா வயதான முதியவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரி சென்ற திமுக வேட்பாளருக்கு அப்பகுதி பொதுமக்கள் பூக்கள் தூவி ,ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளர் திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள், பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறியும் அடுத்த ஆட்சி அமைந்தால் அமைக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் பொது மக்களிடம் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

error: Content is protected !!