Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் தேர்தல் களம்: 15 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு – சின்னங்கள் ஒதுக்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் முடிவடைந்து, 18 பேர் பட்டியலிடப்பட்டனர். இதில் தமிழக வெற்றிக்கழக மாற்று வேட்பாளர் ஈஸ்வரி மற்றும் சிகிச்சை வேட்பாளர்கள் பாலமுருகன் ராஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் இறுதியாக களம் காணுகின்றனர்.

போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரியலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் பிரியங்கா சிங்லா முன்னிலையில், அரியலூர் கோட்டாட்சியரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேமி, வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்து பட்டியலை வெளியிட்டார். இதில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான லதா பாலு (திமுக) உதயசூரியன் சின்னமும்,
தாமரை எஸ்.ராஜேந்திரன் (அஇஅதிமுக) இரட்டை இலைகள், சிவக்குமார் (தமிழக வெற்றி கழகம் ) ஊதல், புகழேந்தி (நாம் தமிழர் கட்சி ) ஏர் சுமக்கும் உழவர், ஸ்டாலின் (பகுஜன் சமாஜ்) யானை, ராஜ்குமார் (அஇபுமமுக) தென்னந்தோப்பு, சுதாகர் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஒளிப்படக் கருவி,
தங்க. சண்முகசுந்தரம் (நாடாளும் மக்கள் கட்சி) ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை ஆகிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுயேச்சைகளாக போட்டியிடும் செம்மலைக்கு வாயு சிலிண்டர், ஜோதிபாசுக்கு வைரம், குமாருக்கு ஊக்கு, வெற்றிவேலுக்கு பென்ச், இளையராஜாவிற்கு குறடு , கிருஷ்ணமூர்த்திக்கு ஏணி, ராஜ்குமார் மின்கம்பம் என்று ஏழு சுயேட்ச்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன் பின்னர் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கையேடுகளும், செலவு கணக்கு தாக்கல் செய்ய படிவங்களும் வழங்கப்பட்டு, உரிய நெறிமுறைகள் அவர்களுக்கு விளக்கமாக அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேமி விளக்கி கூறினார். கூட்டத்தில் பிரதான கட்சிகளின் முகவர்களும், வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!