Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபான கடைகளை 3 நாட்களுக்கு மூட அம்மாநில கலால் துறை உத்தரவிட்டுள்ளது. 21-ம் தேதி காலை 10 மணி முதல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!