Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏழுமலையானுக்கு ரூ.95 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கங்கள் காணிக்கை!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுமார் 95 லட்சம் ரூபாய் (ரூ. 94.80 லட்சம்) மதிப்பிலான தங்கப் பதக்கங்களை இன்று காணிக்கையாக வழங்கியுள்ளார் பெங்களூரை சேர்ந்த பக்தரான டாக்டர் எம். மகாதேவம்மா என்பவர்,

மொத்தம் 753 கிராம் எடையுள்ள 7 தங்கப் பதக்கங்களை அவர், தனது குடும்பத்தினருடன் வந்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி (EO) முட்டாடா ரவிச்சந்திரா மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோரிடம் கோவிலின் ரங்கநாயகலு மண்டபத்தில் வைத்து ஒப்படைத்தார்.

ஏழுமலையான் மீதுள்ள அளவற்ற பக்தியால் இந்த விலையுயர்ந்த காணிக்கையை வழங்கிய அந்தப் பக்தருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.

error: Content is protected !!