Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக-வின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 வாக்குகள் ஈ.வி.எம். எந்திரம் மூலமாகவும், தபால் வாக்குகளாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 384-ம் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றிகள். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள். தமிழகத்தின் முன்னேற்றத்தையும், தமிழக மக்களின் நல்வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது முழு முயற்சியையும் செலுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!